
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
இன்றிரவு (13) 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப் பகுதியில், மக்கள் நடமாட்டம் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்தக் காலப் பகுதியில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், குறித்த தினங்களில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும் அவர் இதன்போது கூறினார்.
அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்ட அவர், வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறினார்.
இவைதவிர, மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மற்றும் மருந்துப்பொருட்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள குறித்த 3 நாட்களின் பின்னர் அதாவது எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னரே தேசிய அடையாள அட்டை முறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய வௌ்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் முழுமையாக போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன வலியுறுத்தினார்.
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.