
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
கப்பல் நிறுவனங்களினால், துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும், ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னகோன் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் இன்றைய தினம் அமெரிக்க டொலரை 355 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ரூபாயின் மதிப்பு நாள்தோறும் சரிவடைந்து வருகிறது.
நேற்று (27) மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 333.88 ரூபாயாக பதிவாகியிருந்தது.