
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டி உள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 1610,80,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13,88,63,472 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 35 ஆயிரத்து 018 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,88,72,091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்கா - பாதிப்பு - 3,35,86,136, உயிரிழப்பு - 5,97,785 , குணமடைந்தோர் - 2,66,20,229
இந்தியா - பாதிப்பு - 2,37,02,832, உயிரிழப்பு - 2,58,351, குணமடைந்தோர் - 1,97,28,436
பிரேசில் - பாதிப்பு - 1,53,61,686, உயிரிழப்பு - 4,28,256, குணமடைந்தோர் - 1,39,24,217
பிரான்ஸ் - பாதிப்பு - 58,21,668, உயிரிழப்பு - 1,07,119, குணமடைந்தோர் - 49,60,097
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.