சர்வதேச அளவில் அரிசி உற்பத்தி குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் சீனாவிற்குக் கடந்த வருடம் முதல் ஏற்றுமதி செய்யத் துவங்கப்பட்டது. இந்தியச் சீன எல்லை பிரச்சனை இருந்த போதிலும் மத்திய அரசு சீனாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.
இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியா சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அரசி அளவு 3 மடங்கு அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு பாஸ்மதி அரசி தான் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் சீன மக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவது Sticky rice அதாவது ஒட்டும் தன்மை கொண்ட அரிசி.
அதனால் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவது பாஸ்மதி அல்லாத அரசி, இந்தியாவில் இதன் உற்பத்தி சற்று குறைவாகவே இருந்தாலும், சீனாவின் டிமாண்ட் பொருத்து தற்போது இதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசியை வைத்து நூடில்ஸ், வைன் தயாரிக்கப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். நவம்பர் மாதத்தில் இருந்து சீனா இறக்குமதியாளர்கள் அரிசிக்கான ஆர்டரை விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் இந்திய அரிசி நிறுவனங்களுக்கு அதிகளவிலான ஆர்டர்கள் குவிந்துள்ள காரணத்தால் இந்த வருடம் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசி சுமார் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
https://www.topbusiness.lk