
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
இங்கிலாந்தை சேர்ந்தவர் பால் வைமேன். இவர் அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினராக செயல்பட்டுவருகிறார். தொண்டு நிறுவனத்துக்கு வரும் நன்கொடைகளை சேகரித்து அவற்றை நிறுவனத்திடம் சேர்க்கும் பணியையும் இவர் செய்வது வழக்கம்.
அப்படி, எஸ்ஸெக்ஸ் பகுதியில் இருந்த கடை ஒன்றில் நன்கொடைகளை சேகரிக்க கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்றிருக்கிறார். நன்கொடை உண்டியலில் இருந்த வித்தியாசமான பழைய நோட்டு ஒன்றை அவர் பார்த்திருக்கிறார். ஒருவேளை இது செல்லாத பணமாக இருக்குமோ என்ற எண்ணமும் அவருக்கு வந்திருக்கிறது.
அதன் பின்னர் அந்த நோட்டை ஒரு ஏல நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் பால். அப்போதுதான் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
100 பாலஸ்தீனியன் பவுண்டுகள் என அச்சடிக்கப்பட்ட அந்த கரன்சி நோட், 1917 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டது. ஏலத்தில் விற்பனை செய்தால் 30,000 யூரோக்கள் வரையில் கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
1917 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் ஆணைக்கிணங்க அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகள் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதுவரையில் இந்த நோட்டுகளில் 10 க்கும் குறைவானவையே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாகவே இந்த கரன்சி நோட்டின் மதிப்பு மிக அதிகம் எனச் சொல்லியிருக்கிறார்கள் ஏல நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள். ஆகவே, இந்த நோட்டை ஏலத்தில் விட முடிவு செய்திருக்கிறார் பால்.
இந்த அரிய நோட்டை கடந்த பிப்ரவரி மாதம் ஏல நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார் பால். இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இந்த கரன்சி நோட்டிற்கான ஏலம் ஆன்லைன் மூலம் நடந்தது.
பரபரப்பாக நடந்த இந்த ஏலத்தில், அரிய ரூபாய் நோட் 140,000 யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் 1.35 கோடி ரூபாய்) விற்பனையாகி உள்ளது.
இதுகுறித்து பேசிய பால்,"30,000 யூரோக்களுக்கு விற்பனையாகும் எனச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த அரிய நோட் 140,000 யூரோக்களுக்கு விற்பனையாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த தொகையை தொண்டு நிறுவனத்திடமே ஒப்படைக்க இருக்கிறேன்" என்றார்.
இந்த ஏலத்தை நடத்திய ஸ்பிங்க் நிறுவனத்தின் கரன்சி நோட்டுகள் நிபுணர் எலைன் ஃபங்க் இதுபற்றி பேசுகையில்,"இது மிகவும் அரிய கரன்சி நோட். இதுவரையில் இதுபோன்ற 10க்கும் குறைவான நோட்டுகளே கண்டறியப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகளுக்கு அவர்களது சேவையை பாராட்டி இந்த நோட்டுகள் வழங்கப்பட்டன" என்றார்.
பால் கண்டுபிடித்த 100 பவுண்டுகள் கரன்சி நோட் 140,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையான சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.