லாஃப் கேஸ் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது

இதுதொடர்பிலான அறிவிப்பினை இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் லசந்த அழகியவன்ன வெளியிட்டுள்ளார்.

லாஃப் கேஸ் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது

உடன் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின்  விலை அதிகரிப்புக்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளது.

அதன்டிப, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் காஸ் சிலிண்டரின் விலை 363 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 1,856 ரூபாயாகும்.

அத்துடன், ஐந்து கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 145 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாயாகும்.

இதுதொடர்பிலான அறிவிப்பினை இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் லசந்த அழகியவன்ன வெளியிட்டுள்ளார்.

எனினும், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0