எரிவாயு விநியோகம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது 

நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எரிவாயு விநியோகம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டது 

நாடளாவிய ரீதியில் மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான அறிவிப்பை லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவும் அறிவித்துள்ளார்.

இதன்படி நேற்று முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

நேற்றைய தினம் மாலை ஆறு மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் எரிவாயு தொடர்பான 20 விபத்துக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன.

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் இது நாட்டில் சர்ச்சை நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் சில தரப்பினர் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தனர்.

என்றபோதும் இன்னொரு தரப்பினர் எரிவாயு கலவையில் ஏற்பட்ட ஏதோவொரு பிரச்சினையே இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow