அலுவலக பணிகளை வீட்டிலிருந்து சிறப்பாக செய்வது எப்படி?

வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்கள் அதற்கு அவசிய தேவையானவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும். முதலாவது மடிகணினி மற்றும் எழுதுவதற்கு வசதியான டெஸ்க் வாங்க வேண்டும். 

அலுவலக பணிகளை வீட்டிலிருந்து சிறப்பாக செய்வது எப்படி?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீடடிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. அப்படி வீட்டிலிருந்தே சிறப்பாக பணியாற்றுவது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-

வீட்டிலிருந்தே பணியாற்றுபவர்கள் அதற்கு அவசிய தேவையானவற்றை கண்டிப்பாக வாங்க வேண்டும். முதலாவது மடிகணினி மற்றும் எழுதுவதற்கு வசதியான டெஸ்க் வாங்க வேண்டும். 

அடுத்து முதுகுவலி, கழுத்து வலி வராத அளவிற்கு சொகுசான நாற்காலி, தேவையிருந்தால் ஸ்கேனர், பிரிண்டர் போன்றவற்றையும் வாங்க வேண்டும்.

அலுவலக பணியாற்றும் போது அதற்காக படுக்கை அறையை தேர்ந்தெடுக்கக் கூடாது. படிக்கும் அறையாக இருந்தால் வேலை சிறப்பாக அமையும். 

படுக்கை உங்கள் கண்ணில் தெரியும் வகையில் இருந்தால் உங்களுக்கு வேலை ஓடாது. தூக்கத் தான் தோன்றும். எனவே அந்த நிலையை மாற்ற வேண்டும்.

பணியாற்றும் போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிறிது தூரம் நடந்து வந்தால் உடல் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இடையில் 10 நிமிடம் இடைவெளி விடுவது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow