அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் கடந்த மாதம் அதிகரிப்பு

ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் கடந்த மே மாதத்திலும் 4.4 சதவீதமாக மாற்றமின்றி தொடர்ந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் கடந்த மாதம் அதிகரிப்பு

கடந்த மே மாதத்தில் பிரதானமாக தேங்காய் எண்ணெய், அரிசி மற்றும் மீன் என்பவற்றின் விலைகளில் அதிகரிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுகாதாரம், வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள், தளபாடம், வீட்டுச் சாதனங்கள் உள்ளிட்டவற்றின் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் காரணமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் கடந்த மாத காலப்பகுதியில் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

மேலும், ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 4.1 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் கடந்த மே மாதத்திலும் 4.4 சதவீதமாக மாற்றமின்றி தொடர்ந்ததாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow