மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகத்தை லிட்ரோ இடைநிறுத்தியது!

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை எரிவாயு விநியோகத்தை லிட்ரோ இடைநிறுத்தியது!

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று (3) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், குறித்த விடயம் தொடர்பில், லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே. வேகபிட்டியவிடம் வினவியபோது, லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய சம்பவங்கள் பதிவாகாதமையால், தமது விற்பனை மற்றும் விநியோகம் என்பன வழமை போன்று இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow