ரூபாய் பெறுமதி குறைப்பை கோரவில்லை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

உடனடியாக செயற்படும் விதத்தில் ரூபாயில் பெறுமதி குறைப்பை மேற்கொள்ளுமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்படுவதை தாம் அவதானித்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாய் பெறுமதி குறைப்பை கோரவில்லை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

இலங்கை ரூபாயில் பெறுமதி குறைப்பை மேற்கொள்ளுமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

உடனடியாக செயற்படும் விதத்தில் ரூபாயில் பெறுமதி குறைப்பை மேற்கொள்ளுமாறு உரிமம் பெற்ற வங்கிகளிடம் கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்படுவதை தாம் அவதானித்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அத்தகைய தகவல்கள் அடிப்படையற்றவை என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான இலங்கை மத்திய வங்கியின் நிலைக்கு அல்லது தொழிற்பாட்டு ரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவித மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0