என்னங்க இது.. பச்சோந்தி மாதிரி கலர் மாறுது?.. 'BMW' கொண்டு வந்த அசத்தல்  தொழில்நுட்பம்

தங்களுடைய காரில், புதிதாக பெயிண்ட் எதுவும் அடிக்காமலேயே, ஆட்டோ மெட்டிக்காக அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

என்னங்க இது.. பச்சோந்தி மாதிரி கலர் மாறுது?.. 'BMW' கொண்டு வந்த அசத்தல்  தொழில்நுட்பம்

உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனமான BMW காரின் நிறத்தை மாற்றிக் கொள்வது பற்றி, அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அடிக்கடி பல புதிய வடிவிலான கார்களையும், அதிலுள்ள தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு இயங்கி வருகிறது BMW நிறுவனம்.

இந்த BMW நிறுவனத்தின் கார்களுக்கு, மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. அந்த வகையில், மிகவும் புகழ் வாய்ந்த இந்த நிறுவனம், தற்போது அசர வைக்கும் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

அப்படிப்பட்ட BMW நிறுவனம் மூலம் உருவாக்கப்படும் கார்களில், புதுவித தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதாவது, தங்களுடைய காரில், புதிதாக பெயிண்ட் எதுவும் அடிக்காமலேயே, ஆட்டோ மெட்டிக்காக அதன் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பது தான் அது.

இதுகுறித்து, சமீபத்தில் லாஸ் வேகாஸ் பகுதியில், எலெக்ட்ரானிஸ் கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது.  அப்போது BMW ix காரின் மீது தொழில் நுட்பத்தின் உதவியுடன் இதனை விளக்கியுள்ளனர். 

E ink என்பதின் உதவியுடன் இந்த முறையை, காருக்குள் இருந்து ஒரு பட்டனை மட்டும் அழுத்தி, நமது காரின் நிறத்தை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த E ink என்பது, மனித முடியின் தடிமனுக்கு சமமான விட்டம் கொண்ட, பல மில்லியன் மைக்ரோ காப்ஸ்யூல்களை உடையது. இவை, Postively Charged Pigments மற்றும் Negatively charged pigments ஆகியவற்றைக் கொண்டு இயங்கக் கூடியது. இத்துடன், மின்சார இணைப்புடன் கூடி, நமக்கு தேவையான கலரை மாற்றிக் கொள்ளலாம்.

தற்போதைக்கு வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களை தான் BMW நிறுவனம் இதில் இணைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், இது ஒரு டிசைன் செய்யப்பட்ட திட்டம் மட்டும் தான் என கூறியுள்ள BMW நிறுவனம், அவர்களின் மின்சார வாகனங்களில், இந்த தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தி பார்க்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow