நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் இவற்றைச் செய்யாதீர்கள்!

சரி! கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்குப் பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம்.

நீங்கள் பணக்காரர் ஆக வேண்டுமென்றால் இவற்றைச் செய்யாதீர்கள்!

இன்றைய காலக்கட்டத்தில் பணக்காரர் ஆக வேண்டுமென பலர் கனவு காணுகின்றனர். 30 அல்லது 32 வயதுக்குள் ஒருவர் கோடீஸ்வரராக முடியுமா எனக் கேட்டால், “முடியும்” என்பதே பதில்.

இந்த உலகில் பணத்துக்கு மட்டும் எப்போதுமே பற்றாக்குறை வருவதில்லை. பணத்தைப் பற்றிய நம் எண்ணங்களுக்குத்தான் பற்றாக்குறை.

சரி! கோடீஸ்வரராக என்ன செய்யவேண்டும் என்பதுக்குப் பதில் என்ன செயக்கூடாது என்பதை இங்கே பார்ப்போம்.

சோம்பேறியாக இருக்கக்கூடாது:

பணக்காரர் ஆவதற்கு , கடும்உழைப்பு அவசியம். உங்கள் தொழிலில் மிகவும் விருப்பத்துடன் கடின உழைப்பைச் செலுத்தவேண்டும். அதிர்ஷ்டத்தால் பணக்காரர் ஆக முடியாது என்பதை அறிந்திருக்கவேண்டும். நினைவில் கொள்ளுங்கள் நாளை என்றுமே வருவதில்லை.

கடனுக்கு ‘நோ’:

உங்கள் வளர்ச்சியில் ‘கடன்’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது. அது உங்களுக்கு மேலும் வருமானத்தைப் பெற்றுத் தராது; வட்டித் தொகையை அதிகரித்து, உங்களின் சேமிப்பையும் வளர்ச்சியையும் பதம் பார்த்து விடும். உங்கள் இலட்சியத்தை அடைந்த பிறகு, கடன் வாங்கி அதை சுழற்சி செய்வது வேறு விடயம்.

கடனுக்கு “நோ” என்றால் கடன் கொடுப்பதையும் சேர்த்து தான். நினைவில் கொள்க, ஒருவருக்கு 100 ரூபாய் கடன் கொடுத்தால், உங்களுக்கு வருடம் 70 ரூபாய் நட்டம், அந்த 100 ரூபாயை உங்கள் வங்கியில் வைப்புத் தொகையாக இருந்திருந்தால், அது ஒரு வருடத்தின் முடிவில் 70 ரூபாய் கொடுத்திருக்கும். நீங்கள் பணக்காரர் ஆவதற்கு ஒவ்வொரு ரூபாயும் மிக முக்கியம்.

ஏழையாக இருக்க வேண்டாம்:

எப்போதும் ஏழையாகவோ அல்லது போதும் என்ற மனத்துடனோ இருக்கக் கூடாது. விரைவில் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்க வேண்டும்.

பணத்தை வெறுக்காதீர்கள்:

கோடீஸ்வரன் ஆக முதல் வழி, உங்கள் சம்பாத்தியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கிக் கொள்ள வேண்டும். பணத்துக்குப் பின்னால் போகக் கூடாது என்று சொல்வார்கள். இதை நம்பாதீர்கள். கண்டிப்பாகப் பணத்தைத் தேடிப் போங்கள். கவனமாகப் பணம் சேர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள். தேடல் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்!

திருமணம்:

திருமணத்தைத் தள்ளி போடாதீர்கள், முடிந்த வரை 25 முதல் 28 வயதுக்குள் கல்யாணம் செய்துகொள்ளுங்கள், கல்யாணம் உங்களுக்குப் பொறுப்புகளை கற்றுத்தரும், அதே சமயத்தில், நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் வீண் செலவுகளைத் தடுக்கும். சாதிக்க வேண்டும் என்ற உந்துதலைக் கொடுக்கும்.

நண்பர்கள்:

நண்பர்கள் வட்டம் சிறியதாக இருக்க வேண்டும். வேலையில் உள்ள நண்பர்கள், வணிக நண்பர்கள், வாழ்வியல் நண்பர்கள் இடையே வேறுபாடு உள்ளது. அதை புரிந்துகொள்ளுங்கள்.

கண்மூடித்தனமான ரிஸ்க்:

கண்மூடித்தனமான ரிஸ்க் எடுக்கக்கூடாது. உதாரணத்துக்கு பங்கு சந்தையின் சேருங்கள் என்று யாராவது சொன்னால் அதை கண்மூடித்தனமாக நம்பாமல் ஆராய்ந்து செயல்படுவது.

ஆடம்பரம் வேண்டாம் :

சிறுகச் சிறுகக் கஷ்டப்பட்டு சேமித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் ஆடம்பரத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். உங்கள் தொழில் மற்றும் முதலீடுகளில் பணம் நன்றாக வரும் வரை ஆடம்பரக் கடிகாரம், விலை உயர்ந்த கார் என்று எதுவும் வேண்டாம்.

இறுதியாக, ஒரே நாளில் பணக்காரன் ஆவது முடியாத காரியம் என்பதைப் புரிந்து மெல்ல மெல்லப் பொறுமையுடன் உணர்ந்து செயற்பட வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow