பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு... வெளியான தகவல்

சில பகுதிகளின், பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பால்மா விற்பனைக்கு இல்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு... வெளியான தகவல்

நாட்டின் சில பகுதிகளில் பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பகுதிகளின், பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பால்மா விற்பனைக்கு இல்லையென நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சந்தையில் தற்போது பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், அதற்கு தங்களிடம் தீர்வு இல்லையெனக் குறிப்பிட்டார்.

டொலர் பற்றாக்குறை காரணமாக பால்மாவை விடவும், ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow