
இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.
editor@topbusiness.lk
நாட்டில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இல்லை எனவும் ஆகவே உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மேலதிகமாக ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்து தேவைகளை இறக்குமதி செய்ய போதுமான வெளிநாட்டு கையிருப்பு இல்லாத காரணத்தினால் கடன் உதவிகளின் மூலமாக இவற்றை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும், வெளிநாட்டு உதவிகளை தாம் எதிர்பார்த்து நிற்பதாகவும் கூறியுள்ள அவர், இவ்வாறான நிலையில் இன்று நாட்டில் ரூபாவுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது.
தேசிய தேவையை பூர்த்தி செய்ய மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். தேசிய ரீதியில் பணத்தை அச்சடிக்கும் இந்த செயற்பாடுகள் காரணமாக வருடாந்த பணவீக்கமானது எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டின் நெருக்கடி நிலைமையில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 588 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளதுடன், 2020 ஜனவரி முதல் தற்போது வரையில் 2.3 டிரில்லியன் ரூபாய்க்கு வெளியீட்டு இடைவெளியை இலக்காகக் கொண்டு பணம் அச்சடிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.topbusiness.lk
Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.