Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலாகிறது Featured

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இன்று முதல் பேருந்து கட்டணங்கள் 19.5 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 350 பிரிவுகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தப்பட்ச கட்டணம் 32 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

2,022 ரூபாவாக காணப்பட்ட சாதாரண சேவையின் ஆகக்கூடிய கட்டணம், 2,417 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டண அதிகரிப்புக்கு அமைய, கொழும்பிலிருந்து கண்டிக்கான சாதாரண சேவைக் கட்டணம் 457 ரூபாவாகவும், குளிரூட்டப்பட்ட சேவைக் கட்டணம் 760 ரூபாவாவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் யாழ்ப்பாணத்துக்கான சாதாரண சேவைக் கட்டணம் 1,438 ரூபாவாகவும், அரை சொகுசு சேவைக் கட்டணம் 1,799 ரூபாவாகவும், குளிரூட்டப்பட்ட சேவைக் கட்டணம் 2,400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் நுவரெலியாவுக்கான சாதாரண சேவைக் கட்டணம் 711 ரூபாவாகவும், அரை சொகுசு சேவைக் கட்டணம் 888 ரூபாவாகவும், குளிரூட்டப்பட்ட சேவைக் கட்டணம் 1,185 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அதிகவேக நெடுஞ்சாலை பேருந்துகள் மற்றும் அதிசொகுசு பேருந்துகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Rate this item
(0 votes)
Business Editor

இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.

 

https://www.topbusiness.lk

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.