நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த சதொச 

எந்தவொரு வகையான அரிசியும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவரால் 5 கிலோகிராம் அரிசி பெற்றுக் கொள்ள முடியும்.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த சதொச 

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச ஊடாக 50 வகையான பொருட்கள் சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளனர்.

சதொச ஊடக குறைந்த விலையின் கீழ் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வகையான அரிசியும் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவரால் 5 கிலோகிராம் அரிசி பெற்றுக் கொள்ள முடியும். டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை குறைந்த விலையில் இந்த பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 50 வகையான பொருட்கள் நிவாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கமைய சீனி ஒரு கிலோ 125 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன்  சவர்க்காரம் முதல் உப்பு வரையான பொருட்கள் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.
 
இன்றைய தினம் முக்கியமான 50 பொருட்கள் இவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும். தேவையான பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow