Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

பொண்ணோட அலைபேசிக்கு வந்த லிங்க்.. கிளிக் பண்ணதும் காத்திருந்த அதிர்ச்சி! Featured

மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 34 வயதான பெண் ஒருவர் கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த மே 9-ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் பான் கார்டு விவரங்களை புதுப்பிக்கும் இணைப்பைக் கொண்ட லிங்க் வந்துள்ளது.

இதை உண்மை என நம்பிய அப்பெண் அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது தனியார் வங்கியின் போலி வலைப்பக்கம் திறக்கப்பட்டது.

அதில் அவருடைய பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்யுமாறு கேட்க, உடனே அதை பதிவிட்டுள்ளார். அதன்பின்னர் அவரது செல்போனுக்கு வந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.80 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது வங்கியில் இருந்து செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண், வங்கியை தொடர்பு கொண்டு தனது வங்கிக் கணக்கை பிளாக் செய்துள்ளார்.

இதனை அடுத்து இதுதொடர்பாக காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதுபோன்று வங்கியின் பெயரில் வரும் போலியான மெசேஜ்களை நம்பி, பயனர்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது என வங்கிகளும், போலீசார் அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Rate this item
(0 votes)
Business Editor

இலங்கை மற்றும் உலக நாடுகளின் வர்த்தக செய்திகள், வணிக செய்திகளை டாப் பிஸினஸ் தளத்தில் பெறலாம்.

 

https://www.topbusiness.lk

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.